Friday, September 19, 2008

கல்வி

கல்வியின் சிறப்பு.
-------------
கல்வி என்பது மனிதனின் வாழ்வில் முக்கியமானது.
கல்வியின் பயன் கற்ற பின்புதான் தெரியும் அதன் சிறப்பும் மக்கள் நம்மீது காட்டும் மரியாதையும் நாம் மற்றவர்களை போற்றி வணங்கவும் நாமும் பண்பாக நடக்கவும் உதவுகின்றது.

கல்வி ஒரு வழி காட்டி. அறிவூட்டி ஒளி கொடுத்து அறியாமைய போக்கி நல் வழி காட்ட வல்லமை கொண்டது.

மனிதர்காளாக பிறந்தவர்கள் கற்கவேண்டியவற்றை கற்று கற்ற படி நண்றாக வாழ்வதே சிறந்தவையாகும்.
கல்வி கற்றுக்கொள்ளாதவன் கண் இருந்தும் கண் அற்றவன் போலாவான்.

உலகில் மிகச்சிறந்த செல்வம் கல்வி கல்வி கற்றால் தான் செல்வம் பெருகும் இல்லத்தில்.
பணத்தால் நாம் எதையும் வாங்கி அழகுபார்க்கலாம்.வாங்கும் பொருள்கள் அழிந்துவிடக்கூடியது.

இத்தனைக்கும் சிறப்பாக அமைவது எதனாலும் அழித்துக்கொள்ள முடியாதது நம்மோடு கூட வருவது நாம் கற்ற கல்வி ஒன்றுதான்.

கல்வி அழியாது நிலையானது நாம் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு கொடுத்து வளம் பெறச்செய்து கொள்ள முடியும்
கற்றவருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு உண்டாகும் கல்வியின் அழகே ஒருவருக்கு பெரும் அழகு. அந்த கல்வி அழகை பெற நாம் முயற்சித்து நண்றாக படிக்க வேண்டும் சிறுவர்களே விளையாட்டில் கவனம் எடுப்பது போல் கல்வியில் முக்கியமாக கவனம் எடுத்து படித்து பெரியவர்களாகவும் நாடுபோற்றும்படி வாழ்க.

அன்புடன்
கொக்குவில் ராகினி. (ஜெர்மனி.)