Wednesday, August 6, 2008

நானும் பறவையாக இருந்தால்.


நானும் பறவையாக இருந்தால்
.----------------
எனக்கு வாயது இரண்டு
எனது வீட்டு பூந்தோட்டத்தில் வண்ண வண்ணப்பூக்கள் பூத்து இருந்தது என்ன அம்மா காலை எழுந்து எனக்கு குளிப்பாட்டி பட்டுச்சட்டை போட்டு அழகாக தலை வாரி பொட்டும் வைத்துவிடுவாள். நான் என்னை எங்கள் கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பேன் அதன் முன் நின்று வட்டமிடுவேன்.
வட்ட மிட்டபடி எங்கள் வீட்டுத்தோட்டத்தை பார்த்தேன் பட்டாம்பூச்சிகள் பூவில் தேன் அருந்துவதை கண்டு ஆனந்தம் அடைந்தேன்.


வட்ட மிட்டபடி எங்கள் வீட்டுத்தோட்டத்தை பார்த்தேன் பட்டாம்பூச்சிகள் பூவில் தேன் அருந்துவதை கண்டு ஆனந்தம் அடைந்தேன் அதன் சிறககளில் வண்ணங்களை கண்டு வியந்தேன் இத்தணை அழகா இந்தப் பட்டாம் பூச்சி. என்று என் கன்னத்தில் கைவைத்தவாறு அதன் அழகை கண்டு கண்டுபொருமையும் மகிழ்வும் கொண்டேன்.

அது தேனை அருந்தி விட்டு பறந்து சென்றபார்த்தேன் உயரத்தில் சிட்டுக்குருவிகள் பறந்து கொண்டு இருந்தன என் மனது கற்பனையில் மிதந்தன எனக்கும் சிறகு இருந்தால் நானும் அதனோடு சென்று விளையாடி இருப்பேன் என. மனது ஏக்கமா இருந்தது.

நானும் சிட்டுக்குருவி போல் இருந்தால் அவர்களோடு எல்லா இடமும் பறந்திருப்பேன் ஒவ்வொரு பூங்காவணத்தையும் சுற்றி பார்த்திருப்பேன் நான் தொட்டுவிட முடியாத வானத்தை அருகில் நின்று பார்த்திருப்பேன் என நினைத்துக்கொள்ள காதில் இனிமையான ஓசை விழுந்தன கூக்கு..கூக்கு அங்கும் இங்கும் பார்த்தால் மரத்தில் குயில் பாடிக்கொண்டு இருந்தது ஓ:.நீதானா அதிகாலை பாடி எழுப்புவது குயிலே எனக்கு உந்தன் சிறகைத்தருவாயா..? உன்னைப்போல் எனக்கும் பறந்து திரிய ஆசைப்படுகின்றேன் பட்டாம் பூச்சியும் என்னை அழைக்கவில்லை சிட்டுக்குருவியும் என்னை அழைத்துச்செல்லவில்லை நீயாவது என்னை அழைத்துச்செல்வாயா நானும் உன்னைப்போல் அதிகாலையில் பாடி எல்லோரையும் துயில் ஏழுப்புவேன். இயற்க்கை காட்சிகளை கண்டுமகிழ்வேன்.

என்னையும் உன்னோடு அழைத்துச்செல் என்றவாறு அழுதேன் குயிலும் என்னை அழைத்துச்செல்லவில்லை
கவலையுடன் வீட்டுக்குள் நுழைந்து கண்ணாடி முன் நின்று அழுதேன்.எனக்கும் சிறகு இருந்திருக்க கூடாதா..? என்று.

அன்புடன்
ராகினி.
---------------
நானும் குருவியா பிறந்திருக்ககூடாத என்னை யாரும் துண்புறச்செய்திருக்கமாட்டார்கள்

No comments: